Skip to main content

அதிமுக கொடிக்கம்பத்தில் பறந்த பாஜக கொடி!

Published on 21/03/2018 | Edited on 21/03/2018
flag


திண்டுக்கல்லில் அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடியை ஏற்றிவிட்டு மர்ம நபர்கள் சிலர் தப்பிச்சென்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அதிமுக கொடிக் கம்பத்தில் இருந்த அதிமுக கொடியை இறக்கி விட்டு பாஜக கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி அதிமுகவினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக பாஜக கொடியை இறக்கியுள்ளனர். அத்துடன் இதுதொடர்பாக போலீஸாரிடமும் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கு பதிவு செய்துள்ள கீரனூர் போலீஸார், கொடியேற்றிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அதிமுக - பாஜக இடையே இணக்கமான சூழல் நிலவி வருகிறது என பொதுமக்கள் பலர் குற்றம்சாட்டி வரும் இந்த நிலையில், அதிமுக கொடிக்கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்