
படங்களைத் தாண்டி பைக் பிரியரான அஜித் ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் உலகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் தனது துபாய் பைக் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்.
அதேசமயம், அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி கைவிடப்படுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில், அவரின் ரசிகர்கள் சோர்வடைந்திருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் சுபாஸ்கரன், “விடாமுயற்சி எங்களது பெருமைமிகு படமாக இருக்கும். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். இப்படம் கைவிடப்படவில்லை” என்றார். நடிகர் அஜித் சென்னை திரும்பியது, விடாமுயற்சி அப்டேட் என அஜித் ரசிகர்கள் மீண்டும் குஷி அடைந்தனர். இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் சைக்கிளிங் செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களை மேலும் குஷி படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டதுடன் அங்கிருந்த குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டினார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.