Skip to main content

சிதம்பரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணை பலவந்தமாக கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தலைமறைவு

Published on 17/11/2019 | Edited on 17/11/2019

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணை கன்னத்தில் அறைந்து குண்டர் போல் செயல்பட்ட தீட்சிதர் மீது. காவல்துறையினர் மூன்று பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்து தேடிவருகிறார்கள்.

 

chithamparam temple... incident


கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ. உ. சி தெருவைச் சேர்ந்த செல்வகணபதி என்பவரின் மனைவி லதா ( 51 ) இவர் காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள ஆயங்குடி ஆரம்ப சுகாதரநிலையத்தில் முதன்மை செவிலியராக பணியில் உள்ளார். இவரது மகன் ராஜேஷ்(21) பிறந்த நாளான சனிக்கிழமை மாலை அர்ச்சனை செய்வதற்காக சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்திலுள்ள முக்குருணி விநாயகர் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவிலில் இருந்த தீட்சிதர் தர்ஷனிடம் மகனுக்கு பிறந்தநாள் எனக்கூறி பூஜை சாமான்களை கொடுத்துள்ளார். பின்னர் மகன் பெயரை கூறுவதற்குள் தீட்சிதர் உள்ளே சென்று தேங்காயை மட்டும் உடைத்துவிட்டு தட்டை கொடுத்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் நான் மகன் பெயர், நட்சத்திரம், ராசி, எதையுமே கூறாத போது தாங்கள் எப்படி  தேங்காயை மட்டும் உடைத்தீர்கள்  என்று கேட்டுள்ளார். அப்போது தீட்சிதர் ஏன் நீ வந்து உள்ளே செய்யேன் என ஆபாசமாக பேசியுள்ளார்.  இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் தீட்சிதர் தர்ஷன் அந்த பெண்மணியை கன்னத்தில் அறைந்து நெட்டிதள்ளியுள்ளார். இதனால் கீழே விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சம்பந்தபட்ட தீட்சிதரிடம் ஞாயம் கேட்டு வாக்குவாதத்தில் இடுபட்டனர். அதற்கு தீட்சிதர் அகங்கார தோரனையில் பதில் கூறியுள்ளார். இது அங்கிருந்தவர்களுக்கு முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் சிதம்பரம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று  புகார் அளித்துவிட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்னர். இது குறித்து சிதம்பரம் காவல்துறை ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல்துறையினர் கோவிலுக்கு வந்துவிசாரணை செய்து சம்பந்தபட்ட தீட்சிதர் மீது  ஐபிசி 294,323, பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தேடிவருகிறார்கள். காவல்துறையினர் தேடுவதை அறிந்த தீட்சிதர் தர்சன் தலைமறைவாக உள்ளார். அவரது தந்தையை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகிறார்கள்.  இதனால் கோயில் தீட்சிதர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அபுதாபியில் முதல் இந்து கோவில்; பிரதமர் மோடி திறந்து வைத்து வழிபாடு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
First Hindu temple in Abu Dhabi and Worship by Prime Minister Modi

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக நேற்று (13-02-24) ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி) சென்றார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அவர் அபுதாபிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் முகமது பின் சயீத் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.  

அதன் பின்பு, இன்று (14-02-24) மதியம் அங்கு நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். இதனையடுத்து, இன்று  மாலை பி.ஏ.பி.எஸ். அமைப்பு சார்பில் பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினார். இதன் பிறகு, மஹந்த் சுவாமி மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதற்கு முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 

அபுதாபி சுவாமி நாராயண் கோவில் வட இந்தியர்களின் நாகரா பாணியில் கட்டப்பட்டிருந்தாலும், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகத்தின் கலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, அபுதாபிக்கு சென்றிருந்தபோது அதிபர் முகமது பின் சயீத், அபுதாபியில் இந்து கோவிலைக் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தார். இத்துடன், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு தானமாகக் கொடுத்தது. இதையடுத்து, மொத்தம் 27 ஏக்கர் நில பரப்பளவில் சுவாமி நாராயண் கோவில் என்ற இந்து கோவிலைக் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அபுதாபியில் முதல் இந்துக் கோவில்; திறந்து வைக்கும் பிரதமர் மோடி

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Opening Prime Minister Modi in First Hindu temple in Abu Dhabi

பிரதமர் மோடி 2 நாள் அரசுப் பயணமாக இன்று (13-02-24) ஐக்கிய அரபு அமீரகம் (அபுதாபி) செல்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அவர் அபுதாபிக்கு சென்று அந்த நாட்டு அதிபர் முகமது பின் சயீத் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசவிருக்கிறார். 

அதன் பின்பு, நாளை (14-02-24) மதியம் அங்கு நடைபெறும் உலக உச்சி மாநாட்டில் கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகிறார். இதனையடுத்து, அன்று மாலை பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட இந்து கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும், கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்தவுள்ளார். அதற்கு முன்னதாக, அபுதாபி இந்து கோவிலில் காலையில் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. 

கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி, அபுதாபிக்கு சென்றிருந்த போது, அதிபர் முகமது பின் சயீத், அபுதாபியில் இந்து கோவிலைக் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்தார். இத்துடன், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு தானமாகக் கொடுத்தது. இதையடுத்து, மொத்தம் 27 ஏக்கர் நில பரப்பளவில் சுவாமி நாராயண் கோவில் என்ற இந்துக் கோவிலைக் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.