kalaignar

Advertisment

திமுக தலைவர் கலைஞர் மறைவிற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது செய்தியில்,

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், 50 ஆண்டுகள் தொடர்ந்து திமுக தலைவர். 5 முறை தமிழகத்தின் முதலமைச்சர், எழுத்தாளர், கலைஞர், படைப்பாளி, பத்திரிக்கையாளர் என்ற பண்முக தன்மை கொண்ட தலைவர் காலைஞர் அவர்கள். உலக அளவில் தமிழர்களுக்கு அழியா புகழை தேடி தந்தவர்.

விவசாயிகள் வாழ்க்கையில் ஒளி விளக்காக திகழ்ந்தவர். காவிரி தாயின் தவபுதல்வன் காவிரி உரிமை மீட்பிற்க்கான இறுதி கட்டப் போராட்டத்தில் எங்களுக்கு முழு பங்களிப்புடன் துணை நின்றவர்.

Advertisment

காவிரி டெல்டா விவசாயிகள் குடும்பங்களின் தலைவராக விளங்கியவர். அவர் மறைவால் விவசாயிகள்,உலக தமிழர்கள் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

தமிழக அரசியலில் மிகப் பெரும் இழப்பு மட்டுமல்ல மிகப் பெரும் அழியா வெற்றிடைத்தையும் ஏற்படுத்திவிட்டது.இந்திய அரசியல் வரலாற்றில் அவருக்கு நிகர் அவரே என்ற வரலாற்று பதிவை ஏற்படுத்தியவர்.

அவரது மறைவால் துயரமடைந்துள்ள அவரது குடும்பத்தினர், கட்சி தொண்டர்கள் அனைவருக்கும் ஆறுதலையும், அனுதாபங்களையும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு சார்பில் தெரிவிப்பதோடு கலைஞருக்கு கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.