42 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்
சென்னை: சான்றிதழ்களை சமர்பிக்காத 42 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 15 நாட்களில் விளக்கம் அளிக்கவிட்டால் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் எனவும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி போலி வழக்கறிஞர்களை களைய பார் கவுன்சில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.