Skip to main content

நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர்?

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

Rahul Gandhi prime ministerial candidate in parliamentary elections?

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் மனுதாக்கல் செய்திருந்தனர். 

 

அக்டோபர் 17 ம் தேதி அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது.  காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த இந்த தேர்தலில் பதியப்பட்ட வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு நேற்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

 

அதில் மல்லிகார்ஜுன் கார்கே 7,897 வாக்குகளை பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் சுமார் 1000 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறினார்.

 

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான அஷோக் கெலாட், “மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தகுதியானவர். அவர் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் அவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் சிறப்பாக செயல்படும். அதே நேரத்தில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்” எனவும் தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்