Skip to main content

தாஜ்மஹால் பெயர் நீக்கப்படவில்லையாம் - உ..பி.அரசு அறிக்கை!

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
தாஜ்மஹால் பெயர் நீக்கப்படவில்லையாம் - உ..பி.அரசு அறிக்கை!


உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றுலாத்தலங்களின் பட்டியலில் இருந்த உ.பி.அரசு நீக்கிவிட்டதாக செய்தி வெளியாகி வைரலாகியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல தரப்பிலிருந்தும் கருத்துகள் பரவின.

தாஜ்மஹால் கட்டப்பட்டதே சரியில்லை என்று உ.பி.முதல்வர் யோகி தெரிவித்தார். அவருக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் அப்படி வெளியான செய்தி தவறு என்று உ.பி.அரசு தெரிவித்துள்ளது.

மேம்படுத்தப்பட வேண்டிய சுற்றுலாத் தலங்களின் பட்டியல் தான் வெளியிடப்பட்டதாகவும்  சுற்றுலாத் தலங்கள் பட்டியலிலிருந்து தாஜ்மகால் நீக்கப்படவில்லை என்றும் உ.பி.அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் தாஜ்மகாலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க அதிகப்படியான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உ.பி.அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்