நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசியிருந்தார். இந்த நிலையில், பிரகாஷ்ராஜ் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் மங்களூரு வந்தார்.பின்னர், அங்கிருந்து கோட்டா அருகேயுள்ள கொட்டட்டு கிராம பஞ்சாயத்து வழங்கும் நாடக்கலையில் சிறந்த சேவைக்கான சிவராம காரந்த ஹூட்டுர விருதை பெற புறப்பட்டு சென்றார். நேற்று உடுப்பியில் அகில கர்நாடக நாத பந்த ஜோகி சமாஜ சேவா சமீதி, ஜெய் பார்கவ பளக, இந்து விழிப்புணர்வு அமைப்பு உள்ளிட்ட பல அமைப்பினர் பிரகாஷ்ராஜுக்கு கருப்பு கொடி காட்டினர். இதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.