உத்தரபிரதேச மாநிலத்தில் மொராதாபாத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உணவு சாப்பிட்டதற்கு பின்னர் மயக்கமடைந்துள்ளனர். இதனால் பதறிப்போன அக்கம் பக்கத்தினர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதன்பின் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. மயக்கமடைந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி மாயமானது தெரியவந்துள்ளது. மேலும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனுடன் செல்வதற்காக மொத்த குடும்பத்தையும் கொலை செய்ய துணிந்துள்ளார் என்றதை தெரிந்துகொண்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

girl poisoned

சிறுமியின் காதலர் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் மேலும் அதிர்ச்சியடைந்தனர். மாயமான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காரணத்திற்காக, சிறையில் இருந்துவிட்டு தற்போது தான் ஜாமீனில் வந்திருந்ததாகவும், அதே நபருடன் சிறுமி மாயமானது தெரியவந்தது.

கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் காதலன் அரவிந்த் குமார் மீது புகார் அளித்தார். விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் சிறுமியின் குடும்பத்தை மிரட்டியுள்ளார்.

Advertisment

இந்நிலையில் சிறுமிக்கும், அரவிந்த் குமாருக்கும் ஏற்பட்ட காதலை வீட்டில் இருந்தவர்கள் கண்டித்துள்ளனர். தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினரை தீர்த்துகட்ட முடிவெடுத்த சிறுமி உணவில் விஷம் கலந்துவிட்டு மாயமானார்.

அந்த உணவை சாப்பிட்ட சிறுமியின் தாய், இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரன்கள், அண்ணி மற்றும் அண்ணன் மகன் ஆகியோர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 5 பேரின் உடல் நலம்தேறிய நிலையில், இரண்டு பேர் கவலைக்கிடமான நிலையில் தொடந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிறுமியின் காதலன் அரவிந்த் குமார் மீது,சதித்திட்டம் செய்தல், விஷம் கொடுத்து கொல்ல முயற்சி செய்தல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமி மற்றும் அவரது காதலனை தேடி வருகின்றனர்.