காஷ்மீர் அருகே சிஆர்பிஎப் வீரர்கள் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சௌக் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் நேற்று மத்திய பாதுகாப்பு படைகள் மற்றும் மாநில போலீசாருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி காலித் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.