காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா அருகே பயங்கரவாதிகள் மீது, பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இடத்தில் பதட்டம் நீடித்து வருகிறது. காயம் அடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.