கர்நாடகாவில் இருந்து, தமிழகத்திற்கு, 104 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு
கர்நாடகாவில் உள்ள, குட்கி அனல் மின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு, 104 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக, மின் வாரியம் அதிகாரப் பூர்வமாக தெரிவித்து உள்ளது. மத்திய அரசின், என்.டி.பி.சி., என்ற, தேசிய அனல் மின் கழகத்திற்கு, நாடு முழுவதும், அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், தென் மாநிலங்களுக்கே பிரித்து வழங்கப்படுகிறது. இந்நிலையில், என்.டி.பி.சி., நிறுவனம், கர்நாடகா மாநிலம், குட்கியில் அமைத்துள்ள, 2,400 மெகாவாட் திறன் உள்ள, அனல் மின் நிலையத்தில், தற்போது, மின் உற்பத்தி துவங்கி உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய மின் நிலையம், எந்த மாநிலத்தில் அமைக்கப்படுகிறதோ, அம்மாநிலத்திற்கு அதிக மின்சாரம் வழங்கப்படும். மீதமுஉள்ள மின்சாரம், மற்ற மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப் படும்.
தற்போது, குட்கி மின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு, 104 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விபரம், மின் வாரியத்தின் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தின், 'கிரிட் டீடெய்ல்ஸ்' பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.