ஜி.எஸ்.டி: டிச.31 வரை வணிகர்களுக்கு அவகாசம் நீட்டிப்பு!
ஜி.எஸ்.டி அமலுக்கு முன் இருப்பில் இருந்த பொருட்களை திருத்தப்பட்ட விலைக்கே விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்துபொருட்கள் அனைத்தும் ஜி.எஸ்.டி முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜி.எஸ்.டி அமலுக்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை திருத்தப்பட்ட விலைக்கே புதிய ஸ்டிக்கருடன் விற்பனை செய்து கொள்ள வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக செப்.30 வரை மட்டுமே காலக்கெடுவை மத்திய அரசு வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.