மோடி அரசு மீது தாக்கு: ராகுலுக்கு ராஜ்நாத் பதிலடி

”நாங்களும் மன்மோகன் சிங் அரசு ஊழலில் சிக்குண்டு வெளிநாடுகளில் அதற்கு எதிர்மறையான பெயர் இருந்த காலத்தில் பாஜகவினரும் வெளிநாடுகளுக்கு சென்றனர். ஆனால் நாங்கள் அரசை விமர்சிப்பதில் மௌனத்தைக் கடைப்பிடித்தோம்.
அமெரிக்காவில் கலிஃபோரினியா பல்கலைக்கழகத்தில் பேசும்போது ராகுல் மோடி அரசு மக்களின் ஒற்றுமையை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது என்றும், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல்களை செய்கிறது. என்றும் கடுமையாக விமர்சித்தார். இந்தியாவில் வாரிசுமுறை அரசியல் உட்பட பல்வேறு துறைகளில் காணப்படுகிறது. என்று கூறி தனது வாரிசு அரசியலை நியாயப்படுத்தினார் ராகுல்.
இதற்கு ராஜ்நாத் சிங் காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் அமெரிக்காவில் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை அரசியலாக்குவது கூடாது என்றார். சிங். காஷ்மீரில் அமைதியின்மை குறித்து ராகுல் கூறிய கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்த அவர் 1989 ஆம் ஆண்டிலும், கடந்த 7-8 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமைகளையும் ராகுல் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். ”1947 ஆம் ஆண்டிற்கு பிறகு எக்காலத்திலும் இல்லாத அளவிற்கு காஷ்மீரில் அமைதி இப்போது நிலவுகிறதே அது ஏன்?” என்று ராஜ்நாத் சிங் கேட்டார்.