mamata banerjee

Advertisment

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதிதொடங்கி பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், ஐந்தாம் கட்ட தேர்தல் 17ஆம் தேதிநடைபெறவுள்ளது.

நான்காம் கட்ட வாக்குப்பதிவின்போது மேற்கு வங்கத்தின்கூச் பெஹார் மாவட்டத்தில் வன்முறை நிகழ்ந்ததது. இதில் நான்கு பேர் மத்திய பாதுகாப்பு படைவீர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு முன்பாக ஒரு நபர் கொல்லபட்டார். இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, "சி.ஆர்.பி.எஃப், வரிசையில் நின்ற வாக்காளர்களைக் கொன்றுள்ளது. அவர்களுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது. தாங்கள் தோற்றுவிட்டோம் என்பது பாஜகவிற்கு தெரியும். எனவே அவர்கள் வாக்காளர்களையும் தொழிலாளர்களையும் கொல்கிறார்கள்" என கூறியிருந்தார்.

மேலும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சந்திக்கவும், கண்டன பேரணி நடத்தவும்முடிவெடுத்தார். ஆனால் கூச் பெஹார் மாவட்டத்தில், அரசியல் கட்சியினர் நுழைவதற்கு, தேர்தல் ஆணையம் 72 மணி நேரம்தடை விதித்திருந்தது. தடை முடிவடைந்த நிலையில், மம்தா பானர்ஜிகூச் பெஹார் மாவட்டத்திற்குச் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்தார். அதில் பலியான பாஜக தொண்டரின்குடும்பமும் அடங்கும்.

Advertisment

தொடர்ந்து அவர், அங்கு நடைபெற்றபேரணியில் உரையாற்றினார். அப்போது அவர், “தேர்தல் நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எந்த வாக்குறுதியையும் அளிக்க முடியவில்லை. தேர்தலுக்குப் பிறகு, அவர்களைப் பார்த்துக்கொள்ளஎங்களால் ஆன அனைத்தையும் செய்வோம்” என்றார். தொடர்ந்து அவர், பலியானவர்களுக்கு நினைவு சிலை எழுப்புமாறு உள்ளூர் திரிணாமூல்தலைவர்களைக் கேட்டுக்கொண்டார். “சிலை குறித்த அறிவிப்பைவெளியிடுவதற்காக, தேர்தல் ஆணையம் எனக்கு நோட்டீஸ் அனுப்பலாம். ஆனாலும் தேர்தலுக்குப்பிறகு சிலை எழுப்புவோம்" எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஐந்து பேர் உயிரழப்புக்குகாரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.