Skip to main content

778 மருத்துவ மாணவர்களை வெளியேற்ற மருத்துவ கவுன்சில் உத்தரவு

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
778 மருத்துவ மாணவர்களை வெளியேற்ற மருத்துவ கவுன்சில் உத்தரவு

2016-17 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதாக பெற்றோர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புகார் கூறி வந்தன.

புதுச்சேரி மாநில சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் சங்கம் சார்பாக இந்திய மருத்துவ கழகத்தில் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடைபெற்றது தெரிய வந்தது. அதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 778 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்து இந்திய மருத்துவ கழகம் உத்தரவிட்டுள்ளது.

இது புதுச்சேரி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

-சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்