Published on 25/05/2021 | Edited on 25/05/2021

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் தினமும் 3500க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று காரணமாக பலியாகி வருகிறார்கள். காவலர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என்று அனைவரும் இந்த தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் இந்த கரோனா இரண்டாம் அலையில் இதுவரை இந்தியா முழுவதும் 513 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக ஐஎம்ஏ தெரிவித்துள்ளது.