War tension; Nationwide security drill? - Date released

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பஹல்காம் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் இந்திய ராணுவம் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கிடையேதொடர்ந்து இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

War tension; Nationwide security drill? - Date released

பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு கடந்த மூன்றாம் தேதி அன்று எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தி இருந்தது. இந்நிலையில் இன்றும் (05/05/2025) இரண்டாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குழுவினர் சந்திப்பு மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் நாளை மறுநாள் (07/05/2025) நாடு தழுவிய ஒத்திகைக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment

War tension; Nationwide security drill? - Date released

மாநில அரசுகளுக்குமத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வான்வெளி தாக்குதல் குறித்து எச்சரிக்கை சைரன்களை இயக்கி ஒத்திகை செய்வது; தங்களை தாங்களே பாதுகாத்தல் குறித்த பயிற்சியை மக்களுக்கு தரவது; முக்கிய தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை எதிரிகள் கண்ணில் இருந்து மறைக்க ஏற்பாடு செய்வது தொடர்பான ஒத்திகை; போர் நேரத்தில் அவசரக் காலத்தில் மக்களைப் பாதுகாப்பாக எப்படி வெளியேற்றுவது என்பது குறித்த ஒத்திகை; எதிரிகள் தாக்குதலின் போது மின்விளக்குகளை அணைப்பதுகுறித்தஒத்திகை; உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைப்பது; தாக்குதல் நடந்தால் தீயணைப்பு துறை, பேரிடர் மீட்புத்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த ஒத்திகைஉள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைகளைமேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.