
பயணங்கள் தொடர்பான ஒரு கட்டுரைப் போட்டியை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல்பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.8 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.6 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசு 5 பேருக்கு தலா ரூ.4 ஆயிரம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதிக்குள் இந்த கட்டுரையை எழுதி அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுரை இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாளவில் நடக்கும் போட்டியில் இந்தியில் மட்டுமே எப்படிக் கட்டுரை எழுத முடியும் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “இந்திய ரயில்வேயா? இந்தி ரயில்வேயா? இந்திய ரயில்வே பயணக் கட்டுரைகளுக்கான போட்டியை அறிவித்துள்ளது. ஆனால் இந்தியில் தான் எழுதப்பட வேண்டும் என்று நிபந்தனை. இவர்களின் நோக்கம் பயணத்தை நினைவுக் கூறுவதல்ல, இந்தியை திணிப்பது மட்டுமே. இரயில்வே நிர்வாகமே, போட்டி விதிகளை மாற்று” என தெரிவித்துள்ளார்.