13 லட்சம் ரயில்வே குடும்பங்களுக்கு என் நன்றி!: சுரேஷ் பிரபு உருக்கம்
மத்திய ரயில்வே துறை அமைச்சராக பியூஷ் கோயல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே ஊழியர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்து விடைபெற்றுள்ளார்.
இன்று மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட்டன. பிரதமர் மோடி தலைமையிலான கேபினேட்டில், புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய மின்சக்தித்துறை அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், தற்போது ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இதனிடையே, முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘13 லட்ச ரயில்வே குடும்பங்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. ரயில்வே துறையில் நமக்கிடையே இருந்த நல்லுறவின் நினைவுகளை பேணிக்காப்பேன். உங்களின் நல்வாழ்வுக்கு வாழ்த்துகள்’ என பதிவிட்டிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி, ஒரே வாரத்தில் ஏற்பட்ட இரண்டு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று சுரேஷ் பிரபு தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் வழங்கினார். ஆனால், அவர் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார். தற்போது மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்