கன்னியாகுமரியில் புயல் நீடிக்குமா?
வெதர்மேன் சிறப்புப் பேட்டி

ஒகி புயல் இன்னும் எத்தனை நாள் நீடிக்கும்?
நேற்று மாலையோட காற்றழுத்தம் குறைஞ்சுருச்சு, புயல் குறையும். ஆனாலும் கன்னியாகுமரியில் இன்றும் மழை தொடரும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும். இது போக திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
அடுத்த வாரம் ஒரு புயல் வரும்னு சொல்றாங்களே?
அது புயலா வருமான்னு தெரியல. ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கு. ஆனா அது கண்டிப்பா டிப்ரெஸ் (depression- அழுத்த குறைவு) ஆகிரும். புயலா மாறுமான்னு சொல்ல முடியாது. அது எப்படி பட்டதுங்குறத நாம இப்போ சொல்றது ரொம்ப, ரொம்ப, ரொம்ப கஷ்டம்.
நீங்க நேத்து காலைலயே 'புயல் ஒன்னு உருவாக்கிருக்கு'னு ஃபேஸ்புக்ல பதிவு போட்டு இருந்தீங்க.. ஆனா அரசு தரப்புல மதியம்தான் புயல் உருவாக்கிருக்குனு அதிகார பூர்வ அறிவிப்பா சொல்லிருக்காங்க, இந்த இடைவெளிக்கு என்ன காரணம்?
இல்ல சார், இத நீங்க அவங்கள்ட்டதான் கேக்கணும். அவுங்களோட ப்ரொசுஜர் என்ன, அவுங்க எப்படி ஃபாலோ பண்றாங்க அப்டிங்குறத நான் சொல்ல முடியாதுல... 35 கி.மீ.க்கு அதிகமா காற்று வீசுனாலே, அது புயலா மாற வாய்ப்பு இருக்கு. அதனாலதான் நான் பதிவு போட்டேன். இது புயலா மாறிடுங்குறதுல ஆயிரம் சதவீதம் நான் உறுதியா இருந்தேன். அப்படி இல்லனா நான் பதிவு போட்டுருக்க மாட்டேன்.

சென்னையில் மழை எப்படி இருக்கும்?
சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் மழை வருவது போலத்தான் தெரிகிறது.
இதற்குமுன் ஏற்பட்ட புயல் அல்லது வெள்ளம்போல் இந்தமுறை ஏதும் நடக்குமா?
அதை உறுதியா சொல்லமுடியாது. இன்னைக்கு புயல் வரும்னு நேத்துவரைக்கும் நமக்கு உறுதியா தெரியாது. அதுமட்டுமில்லாம நம்மை பொறுத்தவரைக்கும் தேவைப்படும் நீரில் 45 சதவீதம்தான் இருக்கு. அதனால நமக்கு மழையின் தேவையும் இருக்கு.
நீங்கள் கொடுக்கும் தகவல்கள்படிதான் பெரும்பாலும் நடக்குது, மக்களும் உங்கள அதிகமாவே பின்தொடருறாங்க. அப்படி இருக்கும்போது அரசு, அல்லது அதிகாரிகளின் பக்கமிருந்து எதுவும் ஃபீட்பேக் வந்துருக்கா?
நான் அஃபிஸியல்(official) கிடையாது, இந்திய வானிலை மையம்தான் அஃபிஸியல். நான் என்னால என்ன தகவலை கொடுக்க முடியுமோ அதைத்தான் கொடுக்குறேன். அதுக்காக நான் வானிலை மையத்திற்கு இணையாக முடியாது. எனக்கு அந்த மாதிரி ஆசையும் கிடையாது, எதிர்பார்க்கவும் இல்லை.
வெகு சில சமயம், தகவல்கள் மாறும்போது வரும் கமெண்டுகள் பற்றி?
அது வருத்தமாகத்தான் இருக்கும். நான் எனக்கு கிடைக்குற தகவலை அடிப்படையா வச்சுதான் சொல்றேன். இத யார் வேணும்னாலும் பண்ணலாம். ஆனா பொறுமையா பண்ணனும். 100 சதவீதம் உறுதியானதுக்கப்பறம்தான் சொல்லணும். மக்கள்ட்ட சொல்றப்ப கவனமா சொல்லணும்.
கமல்குமார்