டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற கடைசி 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது. 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய இந்திய அணி 42.5 ஓவரில் 243 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா 125 , ரகானே 61, கோஹ்லி 39 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா ஒரு நாள் போட்டிகளில் 14வது சதத்தை பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டிகளில் 6000 ரன் மைல்கல்லை எட்டிய 9வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. இதேபோல் டெஸ்ட் தரவரிசையிலும் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.