Skip to main content

பென்குயின் குஞ்சுகள் உணவின்றி உயிரிழப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Published on 15/10/2017 | Edited on 15/10/2017
பென்குயின் குஞ்சுகள் உணவின்றி உயிரிழப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அண்டார்டிகாவில் இந்த ஆண்டு பிறந்த அனைத்து பென்குயின் குஞ்சுகள் உணவின்றி உயிரிழந்துள்ள சம்பவம் விலங்கியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கிழக்கு அண்டார்டிகாவில் அடேலி வகை பென்குயின்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. இங்குள்ள கடல் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பனி சூழ்ந்துள்ளதால், பென்குயின்கள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவு தேட மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. இதனால் இந்த ஆண்டு இனப்பெருக்க காலத்தில் பிறந்த இரண்டு குஞ்சுகளைத் தவிர மற்ற அனைத்து பென்குயின் குஞ்சுகளும் உணவின்றி உயிரிழந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அடேலி பென்குயின் குஞ்சுகள் மொத்தமாக இறப்பது இது இரண்டாவது முறை என்று விலங்கியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பென்குயின் இனம் அழிந்தால் அது உலக அழிவுக்கு காரணமாக அமையும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்