நடிகர் ஜெய்க்கு பிடிவாரண்ட்

போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யை தட்டி எழுப்பினர். அப்போது போதையில் ஜெய் காரை ஓட்டிவந்து தெரியவந்தது. போலீசார் விசாரணைக்குப் பின், நடிகர் ஜெய் மீது குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தற்போது வழக்கு விசாரணைக்கு நடிகர் ஜெய் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி ஆப்ரகாம் லிங்கன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.