Skip to main content

தினகரன் வருகையால் மூடி மறைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை!(படங்கள்)

Published on 30/09/2017 | Edited on 30/09/2017

தினகரன் வருகையால் மூடி மறைக்கப்பட்ட
 எம்.ஜி.ஆர் சிலை!(படங்கள்)


நீட் தேர்வால் மரணமடைந்த அனிதாவின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பதற்காக டிடிவி தினகரன் இன்று விருத்தாசலம் வழியாக குழுமூர் சென்றார்.



இந்நிலையில் விருத்தாசலம் ஸ்டேட் பேங்க் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள  எம்ஜிஆர் சிலை மூடி மறைக்கப்பட்டிருந்தது. சிலையை பழுதுபார்ப்பதற்காக  துணியை மூடி மறைத்து வைத்துள்ளதாக கூறினர். ஆனால் விருத்தாசலம் வழியே குழுமூர் செல்லும் தினகரனுக்கு கடலூர் மாவட்ட அதிமுக(அம்மா அணி)வினர் வரவேற்பு கொடுப்பதற்காக கலையிலேயே ஏராளமானோர் திரண்டனர். அதனால் தினகரன் எம்.ஜி.ஆர் சிலைக்கு மலை அணிவிக்கக்கூடும் என்பதாலேயே சிலையை மூடி மறைத்ததாக தெரிகிறது. மேலும் சிலை உள்ள இடத்தில் எடப்பாடி ஆதரவு அ.தி.மு.வினர் குழுமியிருந்தனர். அதேசமயம் சிலை மூடி இருப்பதால் அவ்விடத்தில் அசாம்பாவிதம் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
எம்.ஜி.ஆர் சிலை மூடப்பட்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

-    சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்