Skip to main content

தமிழகம் முழுவதும் விஜயதசமி உற்சாக கொண்டாட்டம்!

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
தமிழகம் முழுவதும் விஜயதசமி உற்சாக கொண்டாட்டம்!

விஜயதசமியை முன்னிட்டு, சென்னையில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்வி சிறப்பதற்காக கோவிலில் வழிபட்டு, அரிசியில் குழந்தைகளை எழுத வைத்தனர்.

விஜயதசமி அன்று கையில் எடுக்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை. கல்வி, செய்தொழில் போன்ற சகல நிகழ்வுகளும் விஜயதசமி அன்று தொடங்கப்படுகிறது. விஜயதசமியை முன்னிட்டு சென்னையில் உள்ள கோவில்களில் இன்று அதிகாலை முதலே குழந்தைகளுடன் பெற்றோர் திரண்டனர்.

பிஞ்சு மழலைகள் சிறப்பாக கல்வி பயின்று வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பெற்றோர், தட்டுகளில் கொட்டப்பட்டிருந்த அரிசியில், குழந்தைகளின் கை பிடித்து பெயர் எழுத வைத்தனர். பின்னர் குழந்தைகளின் நாக்கில், அரிசி வைத்து எழுதப்பட்டது. இந்தக் கோயில் சிறப்புமிக்கதாக கருதப்படுவதால் தொடர்ந்து குழந்தைகளுடன் பெற்றோர் வந்து கொண்டிருக்கின்றனர். வழிபாட்டுக்குப் பின்னர் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படவுள்ளனர்.

சார்ந்த செய்திகள்