புதுச்சேரி காவல்துறை உதய தினம் கொண்டாட்டம்
புதுச்சேரி காவல்துறை 1963ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் உதயதினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1ஆம் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று காவல்துறை துவங்கியதின் 54ஆவது உதயதினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் ஏற்றுக்கொண்டார். இதனைதொடர்ந்து காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சிறப்புகளை டி.ஜி.பி. தனது உரையில் தெரிவித்தார். இதனையடுத்து சிறந்த காவல்நிலையங்களாக தெரிவு செய்யப்பட்ட பாகூர் , தவளக்குப்பம், நேரு வீதியில் உள்ள போக்குவரத்து காவல்நிலையங்களை அவர் அறிவித்தார். அதனை தொடர்ந்து காவலர்களின் குழந்தைகள் பங்கேற்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
- சுந்தரபாண்டியன்