Skip to main content

மனைவி அழுகிய நிலையில் வாய்காலில் கிடப்பது தெரியாமல் ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டிய போலிஸ்காரர் ! 

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
drain



திருச்சி உய்யகொண்டான் திருமலை அருகே உய்யகொண்டான் வாய்க்கால் வடக்கு கரைப்பகுதியில் கடந்த 1ம் தேதி இரவு அழுகிய நிலையில் பெண் செடி, கொடிகளுக்கு இடையே கிடந்தது. இதனை கண்ட அந்த பகுதியினர் உறையூர் போலிசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 


அந்த பெண் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று உடனடியாக தெரியாமல் போலிசார் குழம்பி போய் இருந்தனர். அந்த பகுதியில் காணமல் போனவர் பட்டியலை வைத்து போலிசார் விசாரணையை துவங்கினர். இந்த நிலையில் திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரின் முழுவதும் உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்பவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அவருடைய கணவர் ராஜசேகரன் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்ததும் தெரியவந்தது. ராஜசேகர் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் புதுக்கோட்டையில் எஸ்.ஐ.யாக வேலை செய்து வருகிறார். 


ஜெகதீஸ்வரி தான் வாய்காலில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய கழுத்தில் சுமார் 15 பவுன் நகை அப்படியே இருந்தால் இது நகைக்காக நடைபெற்ற கொலை இல்லை என்பதை உறுதி செய்தனர் விசாரணை அதிகாரிகள். கோவிலுக்கு செல்லும் போது வாய்காலில் கால் வழுக்கி கீழே விழுந்தி மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்கிற ரீதியில் போலிஸ் விசாரணை செய்து கொண்டிருக்கிறது. 


மனநிலை பாதிக்கப்பட்ட ஜெகதீஸ்வரி கோவிலுக்கு செல்வதாக சொல்லி சென்றவர் காணமால் போனதால் அவருடைய கணவர் ராஜசேகர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காமல் ஜெகதீஸ்வரியை பார்த்தால் தனக்கு தெரிவிக்கும் படி அவருடைய புகைப்படம் ஒட்டிய போஸ்டர்கள் ஒட்டினார். மனைவி வாய்காலில் அழுகி கிடப்பது தெரியாமல் போஸ்டர் ஒட்டிய போலிஸ்காரர் தன் மனைவியின் உடலை பார்த்ததும் கதறி அழுதார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்