Published on 26/05/2021 | Edited on 26/05/2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,764 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னையில் ஒரே நாளில் 3,561 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 98 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3,10,224 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று 29,717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 16,13,221 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 475 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 278 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 198 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 128 பேர் இணை நோய் இல்லாதவர்கள். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 21,340 ஆக அதிகரித்துள்ளது.