Skip to main content

திருமுருகன் காந்தி மீண்டும் கைது

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
திருமுருகன் காந்தி மீண்டும் கைது

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதாக செய்திகள் வெளியானது. சிங்களர்களின் செயலைக் கண்டித்தும், இலங்கை அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன்பு ம.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தமிழ்புலிகள் அமைப்பினரும் இன்று இலங்கை துணைத் தூதரகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பிரவீன்குமார், அந்த அமைப்பைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோர் சென்று இருந்தனர்.

இவர்களை நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். திரும்பும் வழியில் சென்னை லயோலா கல்லூரி அருகில் உள்ள கடையில் திருமுருகன் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் வந்த காவலர்கள் திருமுருகன் காந்தி உட்பட 3 பேரையும் கைது செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

சார்ந்த செய்திகள்