ஸ்டாலின் மீது தம்பிதுரை குற்றச்சாட்டு
திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் எதிர் பிரச்சாரம் எடுபடததால், விரக்தியின் விளிம்பில் அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசி வருகிறார் என அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும், முதலமைச்சருக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் எதிர் பிரச்சாரம் எடுபடவில்லை எனவும் தெரிவித்தார். இதனால் ஸ்டாலின் விரக்தியின் விளிம்பில் அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசி வருவதாகவும் கூறினார். மேலும் திமுக மீது மக்கள் எப்போதும் கோபமாக தான் உள்ளனர் எனவும், அதனால் தான் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல, நூறாண்டுகள் ஆட்சி செய்யும் என கூறிய தம்பிதுரை, அதிமுக இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என தெரிவித்தார். 18 ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக தமிழக பிரச்சனைகள் எதையும் தீர்க்கவில்லை எனவும், நீட் தேர்வு, கச்சதீவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு திமுக தான் காரணமெனவும் அவர் கூறினார்.