Skip to main content

கரோனா தொற்று - கேரள எல்லையில் பாதுகாப்பை அதிகப்படுத்திய தமிழகம்!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

ds

 

இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. அதே போன்று தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு குறைந்து வருகிறது.  

 

இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் கரோனா தொற்றும் தினமும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றது. இந்நிலையில், தமிழக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருபவருக்கு கட்டாயம் இ-பாஸ் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாஸ் இல்லாமல் இன்று (08.03.2021) தமிழகம் வந்த கேரள சுற்றுலா பயணிகளைத் தமிழக காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்