Skip to main content

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த கார்; சென்னையில் பரபரப்பு சம்பவம்!

Published on 17/05/2025 | Edited on 17/05/2025

 

car fell into a sudden pothole on the road in Chennai

சென்னை தரமணியில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் இன்று மாலை 5 மணியளவில் கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது திடீரென அந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கார் முழுவதுமாக கவிழ்ந்து உள்ளே சென்றது.. 10 அடி ஆழத்திற்கும், 15 அடி அகலத்திற்கும் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் கவிழ்ந்த காரில் ஓட்டுநர் ஒரு குழந்தை, இரு பெண்கள் உள்பட 5 பேர் பயணித்துள்ள நிலையில் கார் ஓட்டுநருக்கும் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. 

தகவலின் பேரில் உடனடியாக வந்த போலீசார் காரை பள்ளத்தில் இருந்து மீட்டு, ஓட்டுநரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மெட்ரோ ரயில் பணியால் திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கக் கூடம் என்று கூறப்பட்ட நிலையில், அதனை மெட்ரோ ரெயில் நிர்வாகம் மறுத்துள்ளது. பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் விபத்தும், மெட்ரோ ரயில் பணிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளத்தைச் சுற்றி தடுப்புகளை அமைத்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்