அதிமுக கட்சி சின்னம் யாருக்கு?
அதிமுகவில் 2160 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையில் உள்ள உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்கள் தான் கட்சி சின்னத்தை பெற முடியும். மேலும், எடப்படி அணிக்கு அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆதரவு உள்ளது. எனவே, எந்த அணிக்கு கட்சி, சின்னம் கிடைக்கும் என்று அதிமுகவினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது பற்றி முடிவு எடுப்பதற்காக அக்டோபர் 6ம் தேதி இரண்டு அணிகளிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணையின் முடிவில் தான் கட்சி, சின்னம் யாருக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்படும் என்பதால் அதிமுகவில் இப்போது முதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.