தற்கொலை அல்ல கொலை: ஸ்டாலின் பேட்டி
அரியலூர் மாவட்டம் குழுமூரில் நீட் தேர்வினால் மருத்துவராகும் கனவு கலைந்து போனதால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நாளை மறுநாள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆலோசனை நடைபெறும். நீட் தேர்வினால் அமுதாவின் மருத்துவராகும் கனவு கலைந்துபோனது. நீட் தேர்வு இல்லாது போயிருந்தால் அனிதாவுக்கு மருத்துவர் படிப்பு கிடைத்திருக்கும். அனிதா தற்கொலை செய்துகொல்லவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார். நடந்த சம்பவத்திற்கு காரணமாக நிர்மலா சீதாரமன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் ஆகியோர் பதவி விலக வேண்டும்’’என்று தெரிவித்தார்.