
மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொண்டமாந்துறை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்குப் பின்புறம் அமைந்துள்ள பெரிய ஆற்றில் இரவு நேரத்தில் சட்ட விரோதமாக மின் கம்பங்களில் இருந்து மின் இணைப்புகள் மூலமாக மீன் பிடிப்பதை அங்குள்ள இளைஞர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நேற்று (03.05.2025) இரவு இந்த கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் (வயது 30) மற்றும் தினேஷ் தினேஷ் (28) என்ற இளைஞர்கள் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து 2 இளைஞர்களும் ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர். இது குறித்து அங்கிருந்த அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் அரும்பாவூர் காவல்நிலையத்திற்கு இன்று (04.05.2025) அதிகாலையில் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இது தீவிர விசாரணை மேற்கொண்டார்.