கோவை சின்னியம்பாளைத்தில் அம்மன் எண்டர்பிரைசஸ் பெட்ரோல் பங்க்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் முறைகேடு, கலப்படம் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். வாகன ஓட்டிகள் பங்க்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கியதால் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து பெட்ரோல் பங்க்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.