சிவாஜிகணேசன் திருவுருவப்படத்திற்கு சத்தியமூர்த்தி பவனில் மரியாதை

நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (01.10.2017) காலை 11.00 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னணி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத்தலைவர்கள் மற்றும் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.