Skip to main content

சாலை விபத்து: கணவன், மனைவி உயிரிழப்பு

Published on 02/10/2017 | Edited on 02/10/2017
சாலை விபத்து: கணவன், மனைவி உயிரிழப்பு!

அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம், மல்லிகா தம்பதியினர். இவர்களுக்கு குமார் ராஜகோபால் பூராசாமி ரமேஷ் என நான்கு மகன்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் மகனுக்கு திருமணம் செய்ய ஜோதிட பொருத்தம் பார்த்துவிட்டு டூவீலரில் ஊருக்கு திரும்பினர். அப்போது ஆண்டி மடம் மெயின் ரோட்டில் வேகமாக வந்த கார் ஒன்று டூவிலர் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே வேலாயுதம் உயிரிழந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரது மனைவி மல்லிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இவர்களது மரணச் செய்தி சிலம்பூர் கிராமத்தையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- எஸ்.பி.சேகர்

சார்ந்த செய்திகள்