வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் குவிந்த கூட்டம்

வாகனம் ஓட்டுநர்கள் ஒரிஜினல் ஓட்டுநா் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசு உத்தரவை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டதால் இன்று முதல் ஒரிஜினல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.
அதனால் இதுவரை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் பெற வேகமெடுத்துள்ளனர். இதில் பலரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோர்களாக உள்ளனர்.
இது வரை ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஒரு நாளைக்கு தலா 50 விண்ணப்பங்கள் மட்டுமே வாங்கப்பட்ட நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலை மோத தொடங்கிவிட்டது.
புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்ற காலை 8 மணி முதல் புதிய ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க சுமார் 500 பேர் ஆண்களும், பெண்களுமாக நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் கொடுத்தனர். இதே போல இன்னும் பல நாட்களுக்கு கூட்டம் அதிகரிக்கும் என்கின்றனர் அலுவலர்கள்.
இரா.பகத்சிங்.