காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆற்று மணல் கடத்தல் விவகாரத்தில் அமைச்சரின் ஆதரவாளர் என சொல்லி கொண்டு இருப்பவர்களுக்கு சாதமாக செயல்படும் செங்கல்பட்டு வருவாய் கோட்டாச்சியர் முத்துவடிவேலை கண்டித்து செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் மணல் கடத்தலில் ஈடுப்படிருந்த லாரிகளை பிடித்து கொடுத்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணல் மாஃபியாக்களுக்கு துணை போகும் செங்கல்பட்டு கோட்டாச்சியரை கண்டித்து ஆர்பாட்டம்!
Advertisment