Published on 07/06/2021 | Edited on 07/06/2021

பெட்ரோல் விலை ரூ. 96.71 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. டீசல் ரூ. 90.92-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 மாநில தேர்தல்களை முன்னிட்டு சில வாரங்களாக விலை உயர்த்தப்படாமல் தொடர்ந்து ஒரே விலையிலேயே இருந்துவந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவடைந்த அடுத்த நாளில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டுவருகிறது. நேற்றைவிட பெட்ரோல் விலை 24 பைசாவும், டீசல் விலை 22 பைசாவும் விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையே பெட்ரோல் விலை விரைவில் 100ஐ நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று அச்சத்தோடு பெட்ரோல் விலை உயர்வைக் கவனித்துவருகிறார்கள். இந்தியாவில் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை தற்போதே 105 ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது.