வேகாத வெயில் அடித்தாலும் நடுரோட்டில் நின்று பணியை செய்வது போக்குவரத்து காவலர்கள்தான்.இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட வெப்பம் கூடுதலாகி கொண்டே வருகிறது. அப்படி வெயிலில் நின்று பணி செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை என்ன செய்கிறது என்பதை விளக்குகிறது இந்த செய்தி.

Erode traffic police

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஈரோடு மாவட்டக் காவல்துறை மற்றும் தனியார் அமைப்பு ஒன்று இணைந்து சென்ற சில ஆண்டுகளாக கோடைக்காலத்தில் போக்குவரத்தினை சீர்படுத்திடும் போக்குவரத்துக் காவலர்களுக்கு ஒவ்வொரு நாளும் நீர், மோர் மற்றும் எலுமிச்சப் பழச்சாறு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது ஈரோடு மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் ஈரோடு, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் என நகரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திடும் பணியில் ஈடுபட்டுவரும் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் கடும் வெப்பத்தை சமாளித்து பணியாற்றிடும் வகையிலிலும், அவர்கள் தாகத்தை தணித்திடும் வகையிலும் ஒவ்வொரு நாளும் பழச்சாறுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் காவலர்களுக்கு நீர், மோர் மற்றும் எலுமிச்சப் பழச்சாறுகள் வழங்கும் திட்டத்தை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை சிக்னலில் தொடங்கி வைத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன். பின்னர் "கடும் வெயில் என்றும் பாராமல் பணியாற்றிடும் போக்குவரத்துக் காவலர்கள் உள்ளிட்ட காவலர்களின் பணிக்கு உரிய மரியாதை செலுத்திடும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வெயில்காலம் முடிவடையும்வரை நாள்தோறும் தவறாமல் நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் நீர், மோர், பழச்சாறு காவலர்களுக்கு கொடுக்கப்படும்" என தெரிவித்தார். நல்ல திட்டம் இதை மற்ற மாவட்ட காவல்துறையினரும் கடைபிடிக்கலாமே என்கின்றனர் ஈரோடு மக்கள்.