மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு

டெல்லி சென்றுள்ள அவர், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம், இரட்டை இலை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓபிஎஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்து பேசியதாகவும், தமிழக வளர்ச்சி குறித்த கோரிக்கை மனுவை அளித்ததாகவும் கூறினார். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆராய மத்திய மருத்துவ குழுவை அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார். தினகரனுக்கு இனி அதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்பு இல்லை என்று கூறிய ஓபிஎஸ், முதல்வர் பழனிசாமியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என இவ்வாறு கூறினார்.
படங்கள்: ஸ்டாலின்