Published on 02/08/2021 | Edited on 02/08/2021

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையை சில நாட்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணி தடைபட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை போக்க தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று வரை 2,30,71,282 பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2.15 கோடி தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் செலுத்தப்பட்டுள்ளது. 1,97,18,380 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 33,52,902 பேர் கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், முதல் டோஸ் தடுப்பூசியை இதுவரை 29 சதவீத பேரும், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 7 சதவீத பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர்.