Skip to main content

ஆம்னி பஸ்சில் தீ விபத்து 42 மாணவர்கள் உயிர் தப்பினர்

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
ஆம்னி பஸ்சில் தீ விபத்து 42 மாணவர்கள் உயிர் தப்பினர்



திருச்சியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்ட ஆம்னி பஸ்சில் திருச்சி தனியார் கல்லூரி மாணவர்கள் 42 பேர் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டையை அடுத்த நகர் டோல்கேட் அருகில் சென்றபோது பஸ் பின்பகுதியில் இருந்து புகை வந்ததை அறிந்த டிரைவர் உடனடியாக ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் தீ பிடித்து எரிய ஆரம்பித்ததால் உடனடியாக பஸ்சில் வந்த அனைவரும் உயிர் தப்பினர். தீ விபத்தில் பஸ் முற்றிலும் சேதமானது. 

சார்ந்த செய்திகள்