Published on 09/05/2021 | Edited on 09/05/2021

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்றது. கோவை தெற்கு, நாகர்கோவில், மொடக்குறிச்சி, நெல்லை உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள். இந்நிலையில், நெல்லை தொகுதியில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவை பாஜக குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.