தலைமைச்செயலகம் நோக்கி பேரணி;
108பேர் கைது-19 பேர் சிறையிலடைப்பு
நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்குக் கோரி இன்று தலைமைச் செயலகம் நோக்கி இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய பேரணியில் பங்கேற்றவர்களில் 108 பேர் கைது செய்யப்பட்டனர். 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 19 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.