Skip to main content

ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை

Published on 20/10/2017 | Edited on 20/10/2017
ஒருதலை காதலால் வாலிபர் தற்கொலை

சென்னை ஆதம்பாக்கம், மஸ்தான் கோரி தெருவை சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் ராஜேஷ் (23). இவர் கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அப்பெண்ணுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் வேறு ஒரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதுபற்றி அறிந்ததும் ராஜேஷ் மனமுடைந்து. 

கடந்த 17ம் தேதி இரவு வீட்டின் அறையை உள் பக்கமாகப் பூட்டிக்கொண்டு, உத்திரத்தில் ராஜேஷ் தூக்கு மாட்டிக்கொண்டார். அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்