Skip to main content

ஏரியை பார்வையிட எடப்பாடி செல்கிறார் மு.க.ஸ்டாலின்

Published on 31/08/2017 | Edited on 31/08/2017

ஏரியை பார்வையிட எடப்பாடி செல்கிறார் மு.க.ஸ்டாலின் 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ளது கச்சிராயன் குட்டை ஏரி. தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் கொடுக்க அதன்படி மாநிலம் முழுக்க ஏராளமான ஏரி, குளங்களை தி.மு.க.வினர் தூர்வாரினார்கள். 

தி மு.க.வினர் தூர் வாரிய ஏரி, குளங்களை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சிராயன் குட்டை ஏரியை தி.மு.க.வினர் தூர் வாரி அழகு படுத்தினார்கள். இதை பார்வையிடும் நிகழ்ச்சியை அறிவித்தார் மு.க.ஸ்டாலின். 

எடப்பாடி முதல்வர் பழனிச்சாமியின் சொந்த ஊர் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளுர் அ.தி.மு.க.வினர் தூர் வாரிய ஏரியில் புகுந்து மண் அள்ளினார்கள். இதற்கிடையே தூர் வாரிய ஏரியை பார்வையிட வந்த மு.க.ஸ்டாலினை கோவையில் போலீசார் கைது செய்தனர். பிரச்சனையை தி,மு.க. நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. 

நீதிமன்றம் மு.க.ஸ்டாலின் ஏரியை பார்வையிடலாம் என உத்தரவு வழங்கியது. அதன்படி நாளை 31.8,17 மதியம் 3 மணிக்கு எடப்பாடி சென்று தி.மு.க.வினர் தூர்வாரிய கச்சிராயன் குட்டை ஏரியை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். மேலும் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதால் இன்று இரவு விமானம் மூலம் கோவை வந்து பிறகு சேலம் சென்று இரவு தங்குகிறார் மு.க.ஸ்டாலின் .   
  
- ஜீவாதங்கவேல்

சார்ந்த செய்திகள்